19 August 2017 0 Comments Report

மனிதாபிமானமின்றி பாதசாரி தலை மீது காரை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்: கமெராவில் சிக்கிய காட்சி..!!

பிரித்தானியாவில் கார் ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே பாதசாரியின் தலை மீது வாகனத்தை ஏற்றிச்சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பதற வைத்துள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், சாலையில் கார் நின்றுக்கொண்டிருந்த போது பாதசாரி ஒருவர் அதை கடந்து செல்ல முயல்கிறார்.

உடனே காருக்குள் இருந்த ஓட்டுநர் வேண்டுமென்றே அப்பாவி பாதசாரி மீது காரை மோதுகிறார். இதில் பாதசாரி தடுமாறி கீழே விழுந்த நிலையில் கார் ஓட்டுநர் பாதசாரியின் உடல் மற்றும் தலை மீது காரை ஏற்றி விட்டு வேகமாக அந்த இடத்திலிந்து கடந்து செல்கிறார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள், அசைவின்றி கிடந்த பாதசாரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளனர்.

தற்போது, பாதிக்கப்பட்ட பாதசாரி கடுமையான மூளை பாதிப்புடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் பொலிசில் சரணடைந்துள்ளார். கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

This deadly hit and run was caught on camera!

This deliberate hit and run was almost deadly!

Posted by Daily Mail on Donnerstag, 17. August 2017


Post a Comment

*