19 August 2017 0 Comments Report

சவுதியில் மணமகனை கடத்திய மணமகள்..!!

சவுதி அரேபியாவில் தனக்கு மணமகன் பிடிக்கவில்லையென்ற காரணத்தால் தனது நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்திய மணமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியில் மெக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த திருமணத்தை அந்த பெண்ணின் பெற்றோர்களே ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், மணமகனுக்கு போன் செய்த மணமகள், தனது வீட்டிற்கு வந்து திருமணம் குறித்த நிதி ஏற்பாடுகளை திருமணத்திற்கு முன்னர் பேசிவிடுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.

இதனை கேட்டு மணமகன் காரில் சென்றபோது இரண்டு நபர்கள் இவரது முகத்தில் துணியை கட்டி கடத்தியுள்ளனர். ஒரு வழியாக அவர்களிடம் இருந்த தப்பித்த மணமகன் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதில் மணமகள் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதனைத்தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் அதனால் தனது நண்பர்களுக்கு 20,000 ரியால் கொடுத்து மணகனை கடத்த சொன்னதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் பொலிசார் விசாரணையில் உள்ளனர்.


Post a Comment

*