17 December 2017 0 Comments Report

வயிற்றில் குழந்தையோடு இருக்கும் மனைவி: 10-வது மாடியில் இருந்து விழுந்த கணவன்..!!

பிரேசில் 29 வயது நபர் ஒருவர் 10-வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 29-வயது நபர் தன் நண்பர்களுடன் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக பிரேசில் சென்றுள்ளார்.

அப்போது இவர் அங்கிருக்கும் Ipanema பகுதியின் Prudente de Moraes வீதியில் இருக்கும் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் திடீரென்று அந்த குடியிருப்பின் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அதன் பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனவும், தற்போது அவர் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

பிரேசிலுக்கு சுற்றுலா சென்ற அவர் சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்காமல் அங்கு இருக்கும் பார்களில் அதிக நேரம் செலவடித்து விட்டு, அதன் பின் மது அருந்தி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தன் அறைக்கு அழைத்து வந்ததாக, அருகில் இருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்


Post a Comment

*