17 December 2017 0 Comments Report

கனடா மக்களுக்கு புத்தாண்டு பரிசு: அரசு அதிரடி அறிவிப்பு..!!

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒருபகுதியாக அங்குள்ள மக்களுக்கு அடிப்படை ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் பிரீமியர் Philippe Couillard குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தின் கீழ் கியூபெக் மாகாணத்தில் உள்ள சுமார் 84,000 பேர் பலனடைவார்கள் என நம்பப்படுகிறது. இதில் போதிய வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், உடல் மற்றும் அறிவார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் என இத்திட்டத்தால் பயன்பெறுவர்.

மட்டுமின்றி இவர்களின் பொருளாதார நிலையும் இதனால் உயரும் என பிரீமியர் Philippe Couillard தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டமானது போதிய ஆதரவின்றி தனியாக வாழும் நபர்களை குறிவைத்தே செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 100,000 மக்களை வறுமையில் இருந்து மீட்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும் வறுமை ஒழிப்பு அமைப்புகள் அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றது. வழங்கப்படும் ஆதரவானது நிபந்தனையற்றதாக இருத்தல் வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசின் இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தினால், வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களின் ஆண்டு வருவாய் 12,749 டொலரில் இருந்து 18,029 டொலர் என எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் உயரும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஒன்டாரியோ மாகாண அரசு அங்குள்ள வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 4000 பேருக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அற்ற அல்லது ஆண்டுக்கு 26,000 டொலருக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் அனைவரும் குறித்த திட்டத்தில் பயன்பெறலாம் என ஒன்டாரியோ அரசு அறிவித்துள்ளது.


Post a Comment

*