17 December 2017 0 Comments Report

சேவல்களைப் போன்று நூதனப் போராட்டம்..!! (படங்கள்)

மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்குச் சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்; விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேவல்களைப் போன்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நேற்று (டிசம்பர் 15) ஹர்டா பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரச் சந்தையில் விவசாயிகள் சேவல்களைப் போன்று தங்களை வடிவமைத்துக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை விவசாயிகளின் போராட்டத்துக்கு அம்மாநில அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.


Post a Comment

*