17 December 2017 0 Comments Report

3 கிலோ கட்டி: முதியவருக்கு அறுவை சிகிச்சை..!!

முதியவர் ஒருவருக்கு 3 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் ஹேமேந்திர குப்தா ஆர்யா. 65 வயதான இவருக்கு இதயத்திற்கும், நுரையீரலுக்கு இடையே உள்ள இடத்தில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வலி ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

அண்மையில் அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்தபோது கட்டியிருப்பது தெரியவந்தது

அங்குப் பேராசிரியர் எம்.ஹெச்.பேக் தலைமையிலான மருத்துவர் குழு முதியவருக்குச் சிகிச்சை அளித்தது. தொடர்ந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு, கட்டி அகற்றப்பட்டது. அந்தக் கட்டியின் எடை மட்டும் சுமார் 3 கிலோ இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிகிச்சை முடிந்த பின் முதியவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் பேக் தெரிவித்து, ஆர்யாவிற்கு பிறந்ததில் இருந்தே கட்டி இருந்துள்ளது. அண்மையில் தான் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிகிச்சை அளித்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளோம் என்று கூறினார்.


Post a Comment

*