17 December 2017 0 Comments Report

துபாயில் ஒட்ட‌கங்களுக்குச் சிறப்பு மருத்துவமனை..!! (படங்கள்)

துபாயில் 11 மில்லியன் டாலர் செலவில் ஒட்டகங்களுக்காகச் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

துபாயில் அனைத்துவிதத்திலும் மனிதர்களுக்கு உதவியாக இருப்பது ஒட்டகங்களே. அங்குள்ள ஒட்டகங்களுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான பதிப்புகள், நோய்களுக்கென தகுந்த மருத்துவ வசதி கிடைப்பதில்லை. இதனால் ஒட்டகங்கள் விரைவில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றன.

இந்த நிலையில், ஒட்டகங்களைப் பேணிகாக்கும் வகையில், கடந்த ஆண்டு 11 மில்லியன் டாலர் செலவில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டது. எனினும் அந்த மருத்துவமனையில் ஒரு வருடத்துக்குப் பின் தற்போதுதான் முறைப்படி ஒட்டகங்களுக்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை என நவீன முறையில் இங்கு ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மருத்துவமனையில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட ஒட்டகங்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒட்டகங்களுக்கு மட்டும் சேவை வழங்கும் உலகின் முதல் மருத்துவமனை துபாய் ஒட்டகம் மருத்துவமனை என்று கூறப்படுகிறது.


Post a Comment

*