17 December 2017 0 Comments Report

இந்தியாவுக்கு தேவையான தலைவர் ராகுல்காந்திதான்: அத்வானி ஆலோசகர் சொல்கிறார்..!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு அத்வானியின் முன்னாள் அரசியல் ஆலோசகர் சுசீந்திர குர்கர்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராவார் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுசீந்திர குல்கர்னி கூறி இருப்பதாவது:-

புதிய தலைவர் (ராகுல் காந்தி) பிறந்து இருக்கிறார். அவர்தான் தற்போதைய இந்தியாவுக்கு தேவையான தலைவர்.

மகாத்மா காந்தியின் அரசியல் சித்தாந்தகத்தின் அடிப்படையில் செயல்படும் உண்மையான தலைவர் ராகுல்காந்தி. அவர்தான் அடுத்த பிரதமர் ஆவார். காங்கிரஸ் கட்சியை 19 ஆண்டுகளாக வழி நடத்திய சோனியா காந்தி துணிச்சலான பெண்மணி ஆவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவரான அத்வானிக்கு ஆலோசகராக இருந்த ஒருவரே ராகுல்காந்தி அடுத்த பிரதமராவார் என்று தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

*