;
Athirady Tamil News

இந்திய அணி, தினேஷ் கார்த்திக்குக் கிடைத்த வாய்ப்பு..!

0


இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிக்காகப் போரடி தோல்வி.

முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பார்த்திவ் படேல் விளையாடி வருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள பார்த்திவ் படேல் முதல் இன்னிங்ஸில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவை என்பதால் தினேஷ் கார்த்திக் பெயர் மூன்றாவது போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.

சாஹா மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோஹ்னஸ்பர்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி தொடங்க உள்ளது.

தினேஷ் கார்த்திக் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி1000 ரன்களைச் சேர்த்துள்ளார்.

ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இவர் இருப்பாரா என்பதைப் போட்டி தொடங்கும் நாளில்தான் அறிய முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 10 =

*