;
Athirady Tamil News

ஜெ பிறந்தநாளில் ‘நமது அம்மா’ அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ்..! (வீடியோ)

0


அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் நமது அம்மா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி ஆகியவை சசிகலா வசம் சென்றன.

தற்போது சசிகலா சிறையில் உள்ள நிலையில் அவரது அண்ணன் மகன் விவேக், இவற்றை நிர்வகித்து வருகிறார்.

அதிமுகவுக்கு எதிரான செய்திகளே இவற்றில் பிரதானமாக வரத் தொடங்கியதையடுத்து, அதிமுகவுக்கு அதிகாரபூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்கத் திட்டமிடப்பட்டது.

கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவுக்குப் பிரத்யேகமாகத் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு

‘நமது அம்மா’ எனப் பெயர் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுகவின் தொலைக்காட்சி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − five =

*