;
Athirady Tamil News

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசம்..! (படங்கள்)

0

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், பொலிஸார், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*