;
Athirady Tamil News

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு ஐந்து பதக்கங்கள்!! (படங்கள்)

0


தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு ஐந்து பதக்கங்கள்!!

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 12,13,14 ஆம் திகதிகளில் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தின்; வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் இரண்டு பெண் வீராங்கனைகள் உட்பட ஏழு வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

தங்கசாமி தர்சிகா விநோசினி 23 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும், தியாகராசா நாகராஜா 19 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், புருசோத்துமன் சியாமினி 19 வயதுகுட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும், குகனேநந்திரன் கபிசன் 19 வயதுக்குட்பட்ட 70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும், மகேந்திரராசா பிரவீந் 23 வயதுக்குட்பட்ட 70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

‘கண் போய்ஸ்’ விழையாட்டுக்கழகம் குத்துச்சண்டை வீரர்களுக்கான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*