;
Athirady Tamil News

யாழ்ப்பாண பொலிஸாரின் அணுசரனையுடன் வீடமைப்பு..! (படங்கள்)

0


கடந்த கால யுத்த நிலைமையினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் பெறுமதியான வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் காங்கேசன்துறை தையிட்டிப் பகுதியில் இன்று(18) காலை அடிக்கல் நடப்பட்டது.

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பொ்னான்டோ தலைமையில் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது.

இதன் போது யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியொர் கலந்து கொண்டனர்.

இந்த வீடமைப்புக்கான நிதியை யாழ்.மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகளும் வழங்கியுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*