;
Athirady Tamil News

சடலமாக காதலி: கையில் பணமில்லாமல் தவிக்கும் வெளிநாட்டு இளைஞன்..!!

0

இந்தியாவுக்கு வந்து தனது காதலியை இழந்ததோடு மீண்டும் சொந்த நாட்டுக்கு செல்ல பணமும் இல்லை என பின்லாந்து இளைஞர் புலம்பி வருகிறார்.

பின்லாந்தை சேர்ந்த அலக்ஸி ஜோயல், எமிலியா காதல் ஜோடி இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்த நிலையில், கடந்த 9-ஆம் திகதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கினார்கள்.

அடுத்தநாள் காலை எமிலியா விடுதி அறையில் சடலமாக கிடந்த நிலையில் போதையில் இருந்த ஜோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் எமிலியா மரணம் குறித்து பொலிசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், விடுதியில் தங்கியிருந்த காதலர்கள் விடிய, விடிய மது அருந்தியதோடு, பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

போதை மாத்திரைகளின் வீரியத்தால் எமிலியா இறந்துவிட்டார், எமிலியாவின் மரணத்துக்கு அவர் அதிகளவில் சாப்பிட்ட போதை மாத்திரைகள் தான் காரணம் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில் இதன் முழு விவரம் தெரியவரும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அலக்ஸி ஜோயலுக்கு, எமிலியா இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் கதறி துடித்தார்.

இதையடுத்து எமிலியாவின் உடலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை பின்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 17 =

*