;
Athirady Tamil News

மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை கைது செய்ய உத்தரவு..!

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு சிரேஸ்ட நீதவான் தர்சிகா விமலசிறி இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பிரித்தானிய நாட்டவர் ஒருவருடன், மாலக சில்வா மோதல் சம்பவத்தில் ஈடுபட்டமைத் தொடர்பான வழக்கில் உரியமுறையில் நீதிமன்றில் ஆஜராகாமைக் காரணமாகவே மாலக சில்வாவை கைதுசெய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் மார்ச் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + twenty =

*