;
Athirady Tamil News

காலி மாநகர சபையின் கடமைக்கு இடையூறு: பொலிஸில் முறைப்பாடு..!

0

காலி மாநகர சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்உறுப்பினர் ஒருவரும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரும், அவர்களது ஆதரவாளர்களும் குழுவாக வந்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, காலி மாநகர சபையின் நகர பொறியியலாளர் டீ.ஜீ.மாவடு நேற்று(18) காலி பொலிஸ் நிலையத்திலும், காலி தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுவரும் மதில் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து குற்றம்சாட்டி, முன்னாள் உறுப்பினர் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தாக, அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மதில் தொடர்பாக, பிரதேசவாசிகள் நகர சபையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இவ்வாறு இவர்கள் தமது கடமைகளை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தியதாக, நகர பொறியியலாளர் டீ.ஜீ.மாவடு தமது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + fifteen =

*