;
Athirady Tamil News

காஷ்மீர்: கேபிள் கார்மீது பனிச்சரிவு – ஸ்வீடன் நாட்டு வான் சாகச வீரர் பலி..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட குல்மார்க் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,390 மீட்டர் உயரத்தில் பனிபடர்ந்த அழகிய மலைகள் உள்ளன. இப்பகுதியில் பனிமேகம் தவழ்ந்து செல்லும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலாவாசிகள் கண்டு களிக்கும் வகையில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இங்குள்ள அஃஃபார்வாட் சிகரத்தின் மீது மோதிய பனிப்பாறையில் கோன்டோலா இரண்டாவது வழித்தடத்தில் சென்ற கேபிள் கார் இன்று சிக்கி கொண்டது. விரைந்துவந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய ஸ்வீடன் நாட்டு வான் சாகச வீரர்கள் இருவரில் ஒருவரை உயிருடனும், ஒருவரை பிரேதமாகவும் மீட்டனர்.

இறந்தவரின் பெயர் டேனியல் அக்கேசன் என்று தெரிவித்துள்ள போலீசார் அவரது பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். #tamilnews #Swedishskier

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 9 =

*