;
Athirady Tamil News

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்தின் சுயசரிதை நூல் – ஜனவரி 27ல் வெளியாகிறது..!!

0

டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீக்‌ஷித் தனது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். இவர் தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார். தனது 30 ஆண்டு அரசியல் வாழ்க்கை குறித்து இந்த நூலில் எழுதியுள்ளார்.

‘சிட்டிசன் டெல்லி: மை டைம்ஸ், மை லைஃப்’ என்ற சுயசரிதை நூலை பிரபல புளூம்ஸ்பரி இந்தியா என்ற பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்த நூல் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் 11-வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் போது வெளியிடப்படும்.

அரசியலில் ஆண்கள் அதிகமாக இருந்த காலத்தில் பெண்ணாக ஷீலா பல சாதனைகள் படைத்துள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையை அனைவரும் இந்த நூலின் மூலம் அறிந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*