;
Athirady Tamil News

துணிச்சலாக செயல்பட்ட 18 சிறுவர்-சிறுமியருக்கு தேசிய வீர்தீர விருதுகள்..!!

0

இந்தியாவில் ஆண்டுதோறும் பல மாநிலங்களில் வீரமாக செயல்பட்ட பல சிறுவர் – சிறுமியருக்கு தேசிய வீரதீர விருதுகள் வழங்கப்படும். இந்திய அரசு மற்றும் இந்திய குழந்தைகள் நலவாரியம் இணைந்து இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்காக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 பேர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த விருதுகள் ஐந்து பிரிவுகளாக வழங்கப்படும். அவை பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது பிரிவு விருதுகள்.

விருது விவரங்கள் பின்வருமாறு:-

சட்ட விரோதமாக சூதாட்டம் மற்றும் பந்தயத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவியதற்காக
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது நசியாவிற்கு பாரத் விருது வழங்கப்பட உள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த நேத்ரவதி, மிசோரத்தைச் சேர்ந்த லால்சந்தம்மா மற்றும் மணிப்பூரை சேர்ந்த ராஜேஸ்வரி சானு ஆகிய மூவருக்கும் மற்றவர்களை காப்பாற்ற உயிரை கொடுத்ததால் கீதா சோப்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த கரன்பீர் சிங் என்ற மாணவன் நீரில் மூழ்கி கொண்டிருந்த பள்ளி பேருந்திலிருந்து 15 குழந்தைகளை காப்பாற்றி மரணம் அடைந்தான். அவர் வீரத்தை போற்றும் வகையில் சஞ்சய் சோப்ரா விருது வழங்கப்பட உள்ளது.

பாபு கைதானி விருது மேகாலாயாவைச் சேர்ந்த பெய்ன்லங், ஒடிசாவைச் சேர்ந்த மம்தா டாலை மற்றும் கேரளாவைச் சேர்ந்த சபஸ்டீன் வின்சண்ட் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட உள்ளது.

பொது பிரிவின் கீழ் ராய்ப்பூரின் லஷ்மி யாதவ், நாகலாந்தின் மான்ஷா, சங்போன் கோன்யாக், சின்கை வாங்சா மற்றும் யோக்னி, குஜராத்தின் சம்ரிதி சுசில் சர்மா, மிசோரத்தைச் சேர்ந்த சோனுதுலன்கா, உத்தரக்காண்டின் பான்காஜ் செம்வால், மகாராஷ்டிராவின் நடாஃப் அப்துல் ராயுஃப் மற்றும் ஒடிசாவின் பான்காஜ் குமார் மகாண்டா ஆகிய 10 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

வரும் 24-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய வீரதீர விருது வழங்கி கவுரவிப்பார். பின்னர் 26-ம் தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் அவர்கள் பங்கேற்பர். விருதுக்கு தேர்வானவர்களில் 7 பேர் சிறுமிகள், 11 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 15 =

*