;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், ஐனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு..!

0


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 2 =

*