;
Athirady Tamil News

ரயில் மறியல்: பட்டாசுத் தொழிலாளர்கள் கைது..! (வீடியோ)

0

சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி பட்டாசுத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 24ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று அவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கைக் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று (ஜனவரி 17) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதில்லை. நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலேயே நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் இன்று விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Attachments area

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*