;
Athirady Tamil News

தஞ்சையில் நள்ளிரவில் டாஸ்மாக் பார் முன்பு ரவுடி வெட்டி கொலை..!!

0

தஞ்சை கீழவாசல் சாலைக்காரத் தெருவை சேர்ந்தவர் சின்னராசு. இவருடைய மகன் அப்பு என்கிற ஜெயகாந்தன் (வயது 31).

இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவருடைய பெயர் தஞ்சை கிழக்கு, தாலுகா போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ளது. இவருக்கும், மேலும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கரம்பை ஆதி மாரியம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் பார் முன்பு ஜெயகாந்தன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென ஜெயகாந்தனை, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ஜெயகாந்தன் தலை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. மர்ம நபர்கள் வெட்டியதில் ஜெயகாந்தன் தலை சிதைந்தது.

பின்னர் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தஞ்சையில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயகாந்தன் உடலை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் ரவுடி கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 7 =

*