;
Athirady Tamil News

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்றவர் கைது..!

0

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த சிதம்பரநகரைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் 750 மில்லிலீற்றர் கசிப்பை சட்டவிரோதமாக போத்தலில் விற்பனை செய்து கொண்டிருந்த போது சிதம்பரபரம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + nine =

*