;
Athirady Tamil News

நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு, பிர­தம நீதி­ய­ர­சர் மொஹான் பீரி­ஸுக்கு அழைப்பு.!

0

ன்னாள் சட்ட மா அதி­பரும், பிர­தம நீதி­ய­ர­ச­ரு­மான மொஹான் பீரிஸ், முன்னாள் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரலும் தற்­போ­தைய மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி மொஹம்மட் நவாஸ் இலங்கை மின்­சார தனியார் நிறு­வ­னத்தின் முன்னாள் செய­லாளர் எம்.எம்.சி. பெர்­டி­னென்டன்ஸ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு நேற்று வழக்குத் தாககல் செய்­தது. கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார முன்­னி­லையில் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந் நிலையில் குறித்த மூவ­ரையும் எதிர்­வரும் மார்ச் 8 ஆம் திகதி மன்றில் ஆஜ­ரா­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார அறி­வித்தல் விடுத்தார்.

மொஹான் பீரிஸ் சட்ட மா அதி­ப­ராக இருந்த போது இலங்கை மின்­சார தனியார் நிறு­வனம் சொத்­துக்­களை கொள்­வ­னவு செய்யும் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் பொறுப்புக் கூற­வேண்­டிய அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்கு ஒன்றை தககல் செய்­யாமல் இருக்க, சட்ட ரீதி­யற்ற முறையில் உதவும் வித­மாக சட்ட மா அதிபர் அறிக்கை ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுத்­தமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 2010 டிசம்பர் முதலாம் திக­திக்கும் 30 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலத்தில் இலங்கை மின்­சார தனியார் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளர்கள், சில முன்­னணி ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் ஆராய சிறி­பால ஜயலத் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அக்­கு­ழுவின் அறிக்­கையில் அம்­மோ­ச­டிகள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்ப்ட்டு சட்ட நட­வ­டிக்கை எ டுக்க சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்ப்ட்­டுள்­ளன.

குறித்த அறிக்­கையின் பிர­காரம் குற்­ற­வியல் வழக்­கொன்று தாக்கல் செய்ய முடி­யாது என தீர்­மா­னித்து அதனை தமது கருத்­தாக கடிதம் மூலம் முதலாம் சந்­தேக நபர் மூன்றாம் சந்­தேக நப­ருக்கு கொடுத்­ததன் ஊடாக இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் துஷ்­பி­ர­யோகம் எனும் குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு நீதி­மன்­றுக்கு அறி­வித்­த­துள்­ளது.

அதன்­படி குறித்த மூவ­ருக்கும் எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 113 (அ), 102 ஆகிய அத்­தி­யா­யங்­க­ளுடன் இணைத்து பார்க்­கப்­படும் இலஞ்ச ஊழல் சட்­டத்தின் 70 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ், மோசடி, துஷ்­பி­ர­யோகம், அதற்கு ஒத்­து­ழைப்பு வழ்­னக்­கி­யமை மற்றும் சதித் திட்டம் தீட்­டி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் 20 சாட்­சி­யங்­களும் 19 வழக்குப் பொருட்­களும் தககல் செய்­யப்ப்ட்ட வழக்கில் பட்­டியல் படுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மனைத்த நீதிவான் லால் ரணசிங்க பண்டார, அன்றைய தினம் மன்றில் ஆஜராக சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் அனுப்பினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + fourteen =

*