;
Athirady Tamil News

யாழில் மகனின் கொலை வெறித் தாக்குதலில்; தாய் படுகாயம், சகோதரனின் பிஞ்சு மகள் பலி..! (மேலதிக தகவல், படங்களுடன் & வீடியோ)

0

யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுடைய தனது பெறாமகளை வெட்டிக்கொன்றதோடு தனது தாயாரையும் வெட்டி படுகாயமடையச் செய்த கொடூரன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இச்சக் கொடூரம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று(19) காலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் 3 வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான 33 வயதுடைய குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

இன்று காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் இருந்துள்ளனர்.

அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சகோதரனின் மகளான 3 வயதுடைய தனுஷன் நிக்ஷயா சம்பவ இடத்திலேயே கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தாயாரான 55 வயதுடைய பரமேஸ்வரி என்பவர் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளையின் தாயார் கர்ப்பிணி என்பதால் அவரது கணவனுடன் கிளினிக்கிற்கு சென்றுள்ள நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகனான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவர் தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சருந்தியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்திற்கு குடும்பப் பிணக்கே காரணம் என சந்தேகிக்கும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 10 =

*