;
Athirady Tamil News

வடமாகாணசபை உறுப்பினர்பா.கஜதீபன் கலந்து கொண்ட, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா..! (படங்கள்)

0


எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா – வடமாகாணசபை உறுப்பினர்பா.கஜதீபன் கலந்து கொண்டார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 101ஆவது பிறந்தநாள் நிகழ்வு, யாழ்.பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் கடந்த 17.01.2018 புதன்கிழமை மாலை 03 மணியளவில் பண்டத்தரிப்பு பிரதேச எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகத்தலைவர் நா.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகத்தலைவர் இ.செல்வக்குமார், மானிப்பாய் ஜனசக்தி காப்புறுதி முகாமையாளர் எம்.சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மதப்பெரியார்களின் ஆசியுரைகள், மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இடம்பெற்ற சைக்கிளோட்டப்போட்டி மற்றும் கிரிக்கட், தாச்சிப்போட்டி என்பனவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், சிறப்பு விருந்தினர்கள், ஊரவர்கள், ரசிகர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 9 =

*