;
Athirady Tamil News

விலகினார் மெத்யூஸ், இலங்கைக்கு வெற்றி இலக்கு 321..!!

0


தொடரிலிருந்து விலகினார் மெத்யூஸ் – அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஸ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதவுள்ளன.

இப் போட்டிக்கான ஸ்ரீலங்கா அணிக்கு டினேஷ் சந்திமல் தலைமை தாங்கு வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அணித்தலைவராக மீண்டும் பதவியேற்ற அஞ்சலோ மெத்தியூஸ், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டினேஷ் சந்தி மல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அஞ்சலோ மெத்தியூஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல அணியில் இணைக்கப்பட்டு ள்ளார்.

பங்களாதேஷ், சிம்பாபே மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் இந்த முத்த ரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் பங்களாதேஸ் மற்றும் சிம்பாபே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அணிக்கு இன்று இடம்பெற வுள்ள இப்போட்டி மிக முக்கியமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் (Tamim Iqbal) 84 ஓட்டங்களையும், சகீப் அல் ஹசன் (Shakib Al Hasan) 67 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 3 விக்கெட்டுக்களையும் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கைக்கு அணிக்கு 321 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − ten =

*