;
Athirady Tamil News

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மன் கி பாத்தில் பதிலளிக்க வேண்டும்: பிரதமருக்கு ராகுல் காந்தி டுவிட்..!!

0

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த வானொலி உரையின்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை தொடர்பாக பேசும் பிரதமர் புதிதாக சில திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிடுவதுண்டு.

இதற்கிடையே, சமீப காலமாக பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை தேனீர் அருந்தியபடி கேட்கும் வகையில் ஒவ்வொரு மாநில பா.ஜ.க.வினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதை அறிந்த மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடி மன் கி பாத்தில் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகள், டோக்-லாம் பகுதியில் இருந்து சீன படைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அரியானா மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் பலாத்காரங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வரும் 28-ம் தேதி பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 3 =

*