;
Athirady Tamil News

பாரதிபுரம் கிளிநொச்சி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல்..!

0


பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருக்கு, கிளிநொச்சி பனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு சந்திப் பகுதியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தினால் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக அரச அதிபர் உள்ளிட்ட பலருக்கு கடிதமொன்றை அனுப்பியதாலேயே, கிளிநொச்சி பனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தனக்கு இரணைமடுச் சந்தியில் வைத்து நேரடி அச்சுருத்தல் விடுத்ததாக பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த முறைப்பாடினை ஏற்றுக்கொண்டுள்ள கிளிநொச்சி பொலிஸார், இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − three =

*