;
Athirady Tamil News

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை ஊக்குவிக்கும் வகையில் காணொளி வெளியீடு..! (படங்கள்)

0


மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையினை ஊக்குவிக்கும் வகையில் தாயரிக்கப்பட்ட முன்னோட்ட காணொளி நேற்று(வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மன்னார் ஆஹாஸ் கோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

உலக கனேடிய பல்கலைக்கழக சேவையான WUSC நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத் தளத்தில் போட்டித் தன்மையை மேம்படுத்தும் வகையில் மூன்று மொழிகளிலும் குறித்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிறுவனத்தினர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது குறித்த விஜயத்தின் வெளிப்பாடாக காணொளி தாயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளியானது சுற்றுலாத்துறையில் உள்ள போட்டித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் மாவட்டத்தின் பிரபல்யங்களை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

தாயரிக்கப்பட்ட காணொளியின் 20 வினாடிகள் அடங்கிய முன்னோட்ட காணொளியை உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனமானது மன்னார் மாவட்ட வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் முழுமையான காணொளி மார்ச் மாதம் தேசிய மட்ட ரீதியில் வெளியிடப்பட உள்ளது.

குறித்த வெளியிட்டு நிகழ்வில் உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவன அதிகாரிகள், மன்னார் மாவட்ட வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*