;
Athirady Tamil News

லண்டனில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட, இலங்கை இளைஞனின் நிலை..!

0


லண்டனில் ஓடும் ரயிலில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரியிடமே குறித்த இலங்கையர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் தான் தியானத்தில் இருந்ததாக குறித்த இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள Enfield மற்றும் Stratford இடையேயான பரபரப்பான ரயில் ஒன்றில், 33 வயதான உப்புல் கத்துலந்த என்ற இலங்கையர், பெண் ஒருவரின் பின்னால் நின்று அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது, ரயில் பயணித்து கொண்டிருக்கும் போது குறித்த நபர் முதலில் தனது கையை பிடித்ததாக, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த உப்புல், நான் அவ்வாறான எண்ணங்களை கொண்டதில்லை. நான் பௌத்தத்தை எப்போதும் தியானிக்கும் ஒருவராகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு குறித்த இலங்கையர் மூன்று நாட்களாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இலங்கையர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார் என அவர் தரப்பில் ஆஜராகிய சட்டதரணி Brian Reece தெரிவித்துள்ளார்.

அது வேண்டும் என்றே நடந்த ஒன்றல்ல, அது ஒரு விபத்து எனவும், அதனை அந்த பெண் பாலியல் ரீதியாக சிந்தித்துள்ளார் எனவும், சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ரயிலில் பயணித்த மற்றுமொரு நபர் இந்த பெண்ணிற்கு உதவியுள்ளார் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் எனது தந்தை குறித்து மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான நிலையில் எனக்கு இப்படி ஒரு சிந்தனை எவ்வாறு வரும். அன்று ரயிலில் மிகவும் கூட்டமாக காணப்பட்டது. மக்கள் நெருக்கமாக இருந்தனர். நானும் சிரமத்துடனே பயணித்தேன். எனது கை மற்றவர்கள் மீது படாதவாறு தான் பார்த்துக்கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த முறைப்பாட்டாளர் “நீங்கள் என்னை முறையாக பயணிக்க விடவில்லை” என சத்தமாக கூறியுள்ளார்.

2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கையர் வடக்கு Middlesex வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உதவும் பணியும் வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் 2011ஆம் ஆண்டு கிறீம் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியில் சேர்ந்து தற்போது வரை பணி செய்து வருகின்றார்.

Enfield, பகுதியில் விகாரை ஒன்றை நடத்தி செல்லும் Thabassee Panamare என்ற பிக்கு, “எனக்கு 10 வருடங்களாக உப்புலை தெரியும். அவர் தினமும் விகாரைக்கு வருவார். அவர் தியானம் செய்வார். அவர் ஒரு தனி மனிதன் அத்துடன் எனக்கும் நிறைய உதவிகள் செய்வார். இவ்வாறான நிலையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை நம்ப கடினமாக உள்ளது” என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த குற்றசாட்டிலிருந்து உப்புல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − five =

*