;
Athirady Tamil News

வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்..!! (படங்கள்)

0

வவுனியா நொச்சிமோட்டையில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா நோக்கி வந்த கன்ரர் வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது துவிச்சக்கர வன்டி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவரும் பலத்த காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கருகில் இடம் பெற்ற இவ்விபத்தில் கன்ரர் வாகன சாரதி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை பொருட்படுத்தாமல் வாகனத்தை செலுத்தியமையே இவ்வித்திற்கு காரணமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனை இல் தெரியவந்துள்து.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 20 =

*