;
Athirady Tamil News

வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது..!!

0

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா உக்கிளாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளுடன் உக்குளாங்குளம் பகுதியினை சேர்ந்த ரொபின்சன் (வயது 48) விவேகனந்தன் (வயது 31) சந்திரபத்மன் அபிசேக் (வயது 20) ஆகிய மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*