;
Athirady Tamil News

அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் ஜன.20- 1937..!!

0

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர் இரண்டு முறை அதிபராக இருக்கலாம். அப்படி அதிபராகும் நபர்கள் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்கிறார்கள். இந்த நடைமுறை 1937-ல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1783 – பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன. 1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன. 1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.

1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற போரில் சிலி வெற்றி பெற்றது. 1841 – ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது. 1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது. 1906 – வாரன்ஸ் சர்க்கஸ் (Warren’s Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும். 1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1936 – எட்டாம் எட்வர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார். 1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு- நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது. 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பெர்லின் மீது 2,300 குண்டுகளை வீசினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*