;
Athirady Tamil News

சிவராமை கொன்றவர்களும் கூட்டமைப்புக்குள்ளேயே சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவிப்பு..!!

0

சிவராமை கொன்றவர்களும் கூட்டமைப்புக்குள்ளேயே சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவிப்பு

தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவாகுளும் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர். இந் நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிந்தவுடன் எமது கூட்டமைப்புடன் தாமும் வந்துவிடுவோம் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறு;பிபனர் வினோ நோகதாரலிங்கம் தன்னிடம் தெரிவித்தார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதுலைக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடனும் பொட்டம்மானுடனும் பேசி ஆயுதப்பலம் உச்சத்தில் இருக்கின்ற நிலையில் எமது ஆயதப்போராட்டத்தின் நியாயத்தன்மையையும் அரசியல் செயற்பாட்டையும் சர்வதேச ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் கொண்டு செல்வதற்கு பலமான அரசியல் தயம் வேண்டும் என ஊடகவியலாளர் தராக்கி சிவராமே முன்னின்று தமிழ் தேசிய்ககூட்டமைப்பை உருவாக் காரணமாக இருந்தார்.

ஆனால் இன்று அந்த சிவராமை கொன்றவர்கள் தமிழ் தேசியகூட்டமைப்பினுள் உள்ளர்கள். அந்த கட்சி சார்ந்த ஒரு இளைஞனும் இந்த பிரதேசத்தில் வேட்பாளராக உள்ளார். ஆனால் அந்த அப்பாவி இளைஞன் பாவம். அவாகளுக்கு இது தெரியாது.

இவ்வாறு சிராமை கொன்றுவிட்டு கூட்டமைப்புக்கள் இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள். இடைக்கால அறிக்கையை நாம் குழப்பியதாக இருக்ககூடாது. அரசாங்கம் தேவைப்பட்டால் குழப்பட்டும் என்கின்றார்கள். ஆனால் அரசு இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் இடைக்கால அறிக்கைக்கான ஆதரவை பார்க்கின்றனர்.
கடந்த ஒரு மாதமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இரண்டு கோடி அரசிடம் வாங்கியதாக நான் தெரிவித்து வருகின்றேன்.

ஆனால் ஒரு பாராளுமன் றஉறுப்பினராவது அதை மறுக்கவில்லை. நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இதை மறுக்கட்டும்.

அடைக்கலநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி ஆம்கட்சிக்கு வழங்கப்படுகின்ற பதவி. ஆனால் அவர் இன்று கூறுகின்றார் தாங்கள் அரசாங்க கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என. அவ்வாறெனில் நீங்கள் இந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு வாருங்கள்.

சித்தார்த்தன் வட மாகாண முதலமைச்சரிடம் வட மாகாணசபை தேர்தலில் உங்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார். அதேபோல் டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் எனினடம் தெரிவித்தார் இந்த தேர்தல் முடிந்த பின்னர் உங்களுடன் நாங்களும் வந்துவிடுவோம் என எனவே இவ்வாறான நிலையில் தான் கூட்டமைப்பு உள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்கு இதுவே தமிழ் தேசிய்ககூட்டமைப்பாக போட்டியிடும் இறுதி தேர்தல் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 3 =

*