;
Athirady Tamil News

காலியில் இருவர் ​வெட்டிக் கொலை..!!!

0

காலி, போத்தல, ஹபுகல பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

75 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் அவரின் 65 வயதான சகோதரி ஆகிய இருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை அவர்களது வீட்டிற்குச் சென்ற ஊழியர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து போத்தல பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வீட்டின் வாசல் அருகே சகோதரனின் சடலமும் வீட்டின் பின்புறத்தில் சகோதரியின் சடலமும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரையில் யாரால் என்ன காரணத்திற்கு கொலை செய்யப்பட்டது என அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பாக போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 13 =

*