;
Athirady Tamil News

சுவிட்ஸர்லாந்து ​பெண்ணு மறந்த, பணப் பையை ஒப்படைத்த பொலிஸார்..!

0


சுவிட்ஸர்லாந்து ​பெண்ணு மறந்த பணப் பையை ஒப்படைத்த பொலிஸார்

சுவிட்ஸர்லாந்திலிருந்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் மறதியின் காரணமாக விட்டுச்சென்ற பணப் பையை நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்னான்டோ நேற்று (19) கண்டெடுத்தார்.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் தாதியாக பணிபுரியும் கரவாணா டெடியானம் எனும் பெண் தனது நண்பருடன் நேற்று முன்தினம் (18) இரவு சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளார்.

வழிபாடுகளை முடித்து விட்டு நேற்று கொழும்பு நோக்கி பயணிக்க இருவரும் வேன் ஒன்றில் ஹட்டன் புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

மறதியின் காரணமாக பணப் பையை குறித்த வேனில் விட்டுச்சென்ற கரவாணா புகையிரத கடவுச்சீட்டு வாங்க முற்பட்ட போதே பணப் பையை வேனில் விட்டுச்சென்றதை உணர்ந்தார்.

இது தொடர்பாக அவர் ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து புகையிரத நிலைய அதிகாரிகள் குறித்த சம்பவத்தை நல்லதண்ணி பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

வேனை தேடிச்சென்ற பொலிஸாரிடம் வேன் உரிமையாளரான காமினி ராஜபக்ச என்பர் குறித்த பணப் பையை பாதுகாப்பான முறையில் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த பணப் பையையில் இலங்கை பணம் 30,000/= ரூபா, வங்கி கடனட்டை மற்றும் குறித்த பெண்ணின் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த பணப் பையை நல்லதண்ணி பொலிஸார் நேற்று மாலை குறித்த பெண்ணிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*