;
Athirady Tamil News

மஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்..!!

0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்மோர் தோட்டக்காட்டு பகுதியில் வலது கால் அடிபாதம் ஒன்று இன்று (20) கண்டு பிடிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அதிசய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்மோர் தோட்ட பொதுமக்களால் இந்த வலது கால் அடிபாதம் இனங்காணபட்டவுடன் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதாக வட்மோர் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த கால் அடிபாதம் யாருடையது என்ப​தை கண்டுபிடிப்பதற்காக மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, வட்மோர் தோட்ட மக்கள் குறித்த கால் பாதத்திற்கு மஞ்சல் பூசி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 10 =

*