;
Athirady Tamil News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு..!!

0

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது தலவாக்கலை வாடி வீட்டிற்கு அருகாமையில் மிதந்தையடுத்து பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த சடலமானது இரு தினங்களுக்கு முன் நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கக் கூடுமென சந்தேகிப்பபதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 13 =

*