;
Athirady Tamil News

பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்..!!

0

சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி 25 நாட்களாக நடந்த பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், நேற்றுடன் (ஜனவரி 19) நிறைவுக்கு வந்தது .

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. நேற்றுடன் 25வது நாளாக நீடித்த இந்தப் போராட்டத்தால் பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழிலை நம்பியிருக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.

இதன் காரணமாக சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் செந்த பட்டாசுத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து 25 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு தொழிலாளர் ஒருவரிடம் மின்னம்பலம் சார்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “அமைச்சர் நேற்று இரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வரும் திங்கட்கிழமை முதல் எங்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு ஆலை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*