;
Athirady Tamil News

பொதுஜன முன்னணியின் இரண்டு வேட்பாளர்கள் மைத்திரியுடன் இணைவு..!!

0

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகரகம நகர சபைக்கு பொதுஜன முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான மஞ்சுள ஜயஷாந்த பெரேரா மற்றும் ஹீனட்டிகல மாதின்னாகே ரசிக்கா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டனர்.

குறித்த இருவரும் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து, ஊழல் மோசடியை ஒழித்து தூய அரசியல் இயக்கமொன்றையும் சிறந்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டனர்.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகரகம நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின்; எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய ஜனாதிபதியிடம் கையளித்தார்.

மகரகம நகர சபைக்கு போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + ten =

*