;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி..!!

0

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 வது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்

இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி 56 இரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்ப்பட்ட வேளை சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயம் அடைந்த நிலையில் சக இராணுவ வீரர்களினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + seventeen =

*