;
Athirady Tamil News

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் நஞ்சு அருந்தி வைத்தியசாலையில்..!!

0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனிநபர் ஒருவர் நஞ்சு அருந்தி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

பொலிஸ் நிலையத்தில் வேலை செய்கின்ற பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவருடைய கணாவன் பகல் அவருடன் வந்து உரையாடியதாகவும் திடீரென அவர் நஞ்சு அருந்திவிட்டதாகவும் அவரை கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்த்திருப்பதாகவும் இதற்கு குடும்பத்தகறாரே காரணம் எனவும் தெரிவித்தனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + three =

*