;
Athirady Tamil News

பணத்திற்காக முதியவர்களை மயக்கிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை?..!!

0

பிரான்சில் பணக்கார முதியவர்களை மயக்கி பணத்தை சுருட்டியதுடன் விஷம் வைத்து கொல்ல முயன்ற வழக்கில் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

பிரான்சை சேர்ந்த 57 வயதான Patricia Dagorn எனும் பெண் “Black Widow of the Riviera” என்று அழைக்கப்படுகிறார்.பணக்கார முதியவர்கள் நால்வரை பணத்திற்காக மயக்கி விஷம் வைத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

87 வயது Robert Mazereau என்னும் முதியவரை ஏமாற்றி சொத்துக்களை கையகப்படுத்திய வழக்கில் தற்போது ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறாள்.

இந்நிலையில் Patricia Dagorn உடன் வாழ்ந்த Michel Kneffel என்னும் முதியவர் ஒரு வருடத்திற்குமுன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது பொலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்தபோது, ”Valium” மருந்து பாட்டில்களையும் பத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் வங்கிக் கணக்கு தகவல்கள் உட்பட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.

அவற்றின் உதவியால் இன்னும் பலரை ஏமாற்றியதும், கொலைக்குற்றம் உட்பட பல குற்றங்களில் அவள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

பலரிடம் அவள் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறாள், சிலரிடம் ஆவணங்களைத் திருடியிருக்கிறாள், சிலர் மீது கற்பழிப்புக் குற்றம் சாட்டியிருக்கிறாள்.

அவர்களில் இருவர் சாட்சியமளிக்க முன்வந்துள்ளனர், குற்றம் நிரூபிக்கப்படடால் அவளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

இதுகுறித்து கருத்துக் கூறிய அவளது கடைசி மகன் “அவள் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவள்தான்” என்று தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − five =

*