;
Athirady Tamil News

பொறாமையால் கோடாரியை எடுத்து மனைவியின் கையை வெட்டிய கணவர்..!!

0

ரஷ்யாவில் தன்னிடம் விவாகரத்து கேட்ட மனைவி வேறு யாரையும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற பொறாமையில் கணவர் அவரது கைகளை கோடாரியால் வெட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாஸ்கோவில் வசித்து வந்த Margarita Grachyov(25) என்ற பெண்மணிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து, இவரை ஏமாற்றிய காரணத்தால், கணவரை விட்டு பிரிந்துசெல்ல முடிவு செய்து, அதன்படி, எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு கணவர் மறுத்துள்ளார். மேலும் தனது மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்துவது என்பது குறித்து இணையதளங்களில் சோதனை நடத்தி, தினம் தினம் மார்க்ரேட்டை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கட்டையால் அடிப்பது, இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே நிற்க வைப்பது என்று தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, கோடாரியை எடுத்து தனது மனைவியின் கையை வெட்ட முற்பட்டதில், மார்க்ரேட்டின் கைது துண்டித்து செல்லும் அளவுக்கு காயமடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவரே தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மார்க்ரேட்டுக்கு, அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி மார்க்ரேட்டின் கணவரை கைது செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eight =

*