;
Athirady Tamil News

விமான நிலையத்தில் விற்பனை மையம்..!!

0

டெல்லி விமான நிலையத்தில் பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்தியேக விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் நுகர்பொருள் சந்தையில் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனது ஆயுர்வேத பொருள்களை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லும் முனைப்பில் பதஞ்சலி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபடியாகச் சமீபத்தில் (ஜனவரி 16) தனது பொருள்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்காக அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி தேசிய விமான நிலையத்தில் பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்தியேகமான விற்பனை மையத்தை ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியுள்ளது.

விற்பனை மையத்தைப் பாபா ராம்தேவ் தொடங்கி வைக்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர்களான மனோஜ் சின்ஹா மற்றும் அனுராக் தாகூர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய பாபா ராம்தேவ், “ஹரித்வாரிலிருந்து ஹர் த்வார் (அனைத்து வீடுகள்) வரையில் செல்லும் பதஞ்சலி இனி சமுத்ர பார் (கடல் தாண்டி) செல்லும் என்றார். ஆன்லைன் விற்பனையைக் குறிவைத்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, “ஆன்லைன் சேவையை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் இதன்மூலம் எங்களால் மக்களை எளிதில் சென்றடைய இயலும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 15 =

*