;
Athirady Tamil News

மகளுக்கு சிகாகோ என பெயர் வைத்த அமெரிக்க நடிகை..!!

0

அமெரிக்காவின் பிரபல நடிகை கிம் கார்தஷியன் – கென்யே வெஸ்ட் ஜோடிக்கு கடந்த திங்கள் கிழமை வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பிறந்த இந்த குழந்தைக்கு சிகாகோ என பெயரிட்டுள்ளனர்.

இது குறித்த அறிவிப்பை கார்தஷியன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பெயருக்கான காரணத்தை கூறவில்லை. முதல் குழந்தைக்கு நார்த் எனவும் இரண்டாவது குழந்தைக்கு செயிண்ட் எனவும் பெயரிட்டுள்ளனர்.

கென்யே வெஸ்ட் சிகாகோவில் வளர்ந்தவர் என்பதால் இந்த பெயர் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான இந்த நட்சத்திர ஜோடி குழந்தை பிறந்ததை கொண்டாடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − one =

*