;
Athirady Tamil News

பொலி­ஸா­ருக்­கான தபால் வாக்­க­ளிப்பு நாளை..!!

0

தேர்தல் கட­மை­களில் நேர­டி­யாக ஈடு­படும் பொலி­ஸா­ருக்கும் மாவட்ட தேர்தல் அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கு­மான தபால் மூல வாக்­க­ளிப்பு நாளை 22 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெ­று­மென மேல­திக தேர்தல் ஆணை­யாளர் எம்.எம்.மொஹம்மட் தெரி­வித்தார்.

ஏனைய அரச ஊழி­யர்­க­ளுக்­கான தபால்­மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் 25 ஆம், 26 ஆம் திக­தி­களில் நடை­பெ­று­மெ­னவும் அவர் தெரி­வித்தார். இம் முறை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக 5 இலட்­சத்து 60 ஆயி­ரத்து 536 அரச பணி­யா­ளர்கள் தகுதி பெற்­றுள்­ளனர். தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக சுமார் 6 இலட்சம் விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­ற­தா­கவும், அவற்றில் கணி­ச­மா­னவை முறை­யாக பூர்த்தி செய்­யப்­ப­டாமை உள்­ளிட்ட கார­ணங்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் ஆணை­யகம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் குரு­ணாகல் மாவட்­டத்தில் தபால் மூல வாக்­கா­ளர்கள் தொகை 67 ஆயி­ர­மாக பதி­வா­கி­யுள்­ளது. இதற்கு அடுத்­த­ப­டி­யாக கண்டி மாவட்­டத்தில் 48 ஆயிரம் பேரும், அநு­ரா­த­புர மாவட்­டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + eight =

*