;
Athirady Tamil News

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு..!!

0

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லையை நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி வரை குறித்த கால எல்லையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

2017, 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் தினமாக ஜனவரி 26றினை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தது.

எதுஎவ்வாறு இருப்பினும், இதனை எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த விண்ணப்பங்களை இணையத்தினூடாகவும் அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*