;
Athirady Tamil News

படுக்கையுடன் பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்: பெற்றோரை கைது செய்த பொலிஸ்..!!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுகாதாரமற்ற குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் குறித்த 13 பேரின் பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில் 17 வயது இளம் பெண் ஒருவர் பெற்றோரின் பார்வையில் இருந்து கடந்த ஞாயிறு காலை தப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு அவர் அளித்த புகாரில், தமது 12 சகோதரர்களும் பெற்றோரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளம் பெண்ணின் பெற்றோரான David Allen Turpin(57) மற்றும் Louise Anna Turpin(49) ஆகியோரை தொடர்பு கொண்ட பொலிசார் விசாரித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களது குடியிருப்பை முற்றுகையிட்ட பொலிசார், சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − one =

*